யாழ்.மாவட்டத்தில் களவுபோகும் திரிபோஷா! காரணம் யார்?


யாழ்.மாவட்டத்தில் குழந்தைகளுக்கான திரிபோஷா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு மாதத்திற்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு வழங்கப்பட இருந்த திரிபோஷா பொதிகளில் சுமார் 30 பைகள் மாயமாகியுள்ளது.

அதேவேளை தற்போது நாட்டில் திரிபோசா மாவுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் திரிபோஷா வழங்கப்படாது கர்ப்பிணி தாய்மார் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த திரிபோஷா பொதிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் களவாடப்படவில்லை என கூறப்படுகின்றது.

அதனை மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கொண்டு சென்றவர்களும், அதனை அனுப்பியவர்களும் களவாடியதாக அறியக்கிடைத்துள்ளது.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் திரிபோசா வழங்கப்பட்டுவரும் நிலையில் கிடைக்காதவர்கள் முறைப்பாடளித்தாம் மட்டுமே ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கென அரசாங்கம் இலவசமாக வழங்கி வரும் திரிபோக்ஷா விற்பனைக்கு செய்யப்டுவது சட்டப்படி குற்றமாகும்.

மிகவும் வறிய மக்களுக்கு திரிபோக்ஷா வழங்கப்பட்டு வருகின்றது, அதனையும் கூட திருடுபவர்கள் நம் சமுதாயத்தில் உள்ளமை வெட்கப்படவேண்டிய செயலாகும்.
Previous Post Next Post


Put your ad code here