நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (19) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.315.26 ஆகவும் விற்பனை விலை ரூ.328.92 ஆகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே ரூ. 314.95 ஆகவும், ரூ. 328.65 ஆகவும் காணப்பட்டது.
எவ்வாறெனினும் மத்திய கிழக்கு நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கனடியன் டொலர் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக அது வீழ்ச்சியடைந்துள்ளது.
Tags:
sri lanka news