ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவியும் ஆசிரியர் பாலினி கண்ணதாசனின் மாணவியுமான. அபிநயா ரஜீபனின் பரத ஆடல் அரங்கேற்றம்
யாழ்ப்பாணகலாசார மண்டபத்தில் கடந்த 20.08.3023 வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இணைத் தலைமையில் அரங்கு நிறை திரளான மக்களோடு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண முன்னைநாள் இந்திய துணைதூதுவர் ஸ்ரீமான் ஆ. நடராஜன் பிரதமவிருந்தினராகவும் ஜனாபதி தேசிய செயலக மேலதிக செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைகழக தமிழ்த்துறைத்தலைவர் கி. விசாகரூபன்.பேராதனைப்பல்கைக்கழக தமிழ்துறைத்தலைவர் ஸ்ரீபிரசாந் மற்றும் முன்னாள் யாழ் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலய அதிபரும் மன்னார் சென் அன்ரனீ பாடசாலை தற்போதைய அதிபரும் ஆன அருட்சகோதரி மேரி றொசாந்தி அவர்களும் கெளரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்
அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் நுண்கலைமாணி பரத கலாவித்தகர் ஸ்ரீமதி பாலினி கண்ணதாஸ், பாட்டு யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாத நுணகலைப்பீட முதுகலை விரிவுரையாளர் தவநாதன் றொபேட், மிருதங்கம் சட்டமாணி கண்ணதாஸன் இசைநிலவன், வயலின் கேதீஸ்வரன் வேலதீபன் புல்லாக்குழல் கமலநாதன் தேசிகன் ஆகியோர் சிறப்புடன் இணைந்து இருந்தனர்
இந்திய கலாசார மத்திய நிலையத்தின் திரளான கலைஞர்கள் சூழ நடைபெற்ற முதலாவது நடன அரங்கேற்ற நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது
யா.தர்மினி