தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா நேற்று முன் தினம் கிளிநொச்சி கனகராயன் குளத்தில் இடம் பெற்றது.
கிராம அலுவலகர் தலமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த மண்ணில் வித்தாகிப்போன மறவர்களுக்கும் மக்களுக்கும் அகவணக்கத்தைச் செலுத்தியதுடன் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக கரைச்சிப் பிரதேச செயலகர் எஸ். பாலசுந்தரம் ஜெயகரன் ,மாவட்ட அபிவிருத்தி பிரதிநிதி ,கனகாம்பிகைக்குளம் கிராம அலுவலகர் திரு திருமதி யசோதரன் யசோதா ,சமுர்த்தி உத்தியோகத்தர் கு.புஸ்பகரன் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு,தூயதமிழ் சனசமூக நிலையத்தின் தலைவர் திருவரன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து கட்டிடத்திற்கான நாடாவை பிரதேசசெயலகர் ,மாவட்ட அபிவிருத்திப் பிரதிநிதி,கிராம அலுவலகர் ,சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் வெட்டித் திறந்து வைத்தனர் .
தொடர்ந்து இயங்கிவரும் சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள் குறித்தும் நூலகச் செயற்பாடு குறித்தும் தூயதமிழ் சனசமூகத்தின் பொருளாளர் காவலூர் அகிலன் கருத்துகளை வழங்கியதோடு பிரதேச செயலகர் மற்றும் மாவட்ட அபிவிருத்திப் பிரதிநிதி ஆகியோரின் மகிழ்ச்சிகரமான கருத்துக்களோடும் பாராட்டுகளோடும் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந் நிகழ்வில் மாதர் சங்க உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,உதய லட்சுமி முன்பள்ளி ஆசிரியர்கள் ,தூயதமிழ் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்,விழிப்புக்குழு உறுப்பினர்கள்,தூயதமிழ் சனசமூக உறுப்பினர்கள் ,கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி
Tags:
sri lanka news