இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு நடாத்தும் தெய்வீகத் திருக்கூட்டம் - தொடர் நிகழ்வு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 23.08.2023 புதன்கிழமை , மூன்றாம் நாள் நிகழ்வாக இன்று மாலை 4.15 மணிக்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், ய.அநிருத்தனன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர், இரண்டாவது குருமகா சந்நிதானம், வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் திருமுன்னிலையில்
ஆசியுரையினை, அமெரிக்கா ஹவாய், சைவ ஆதீனம், குருதேவர், சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர், வணக்கத்திற்குரிய ஆன்மிகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் அருளுரையினை வழங்கவுள்ளார்.
வேலணை பிரதேச செயலாளர் கைலாசம்பிள்ளை சிவகரன் பிரதம அதிதியாகவும் , யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி எஸ் முகுந்தன் சிறப்பதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
வேலணை பிரதேச செயலக தொண்டர் திருநாவுக்கரசர் அ.நெ. பாடசாலை , நயினாதீவு நாகபூசணி அ.நெ.பாடசாலை , புங்குடுதீவு காளிகா பரமேஸ்வரி ஆகிய அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினரின் நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது.
வேலணை பிரதேச செயலக, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. த.விஜிதா வின் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று ” என்னும் தலைப்பிலான கருத்துரையும்
‘கந்தபுராணம் காட்டும் வாழ்வியல் ’ என்னும் விடயப் பொருளில் ஆன்மிகப் பிரசாரகர், செ பிருந்தாபரனின், ''முருகனின் அவதார மகிமை '' மற்றும் மு.இ.ஜெயலக்சுமி யின் சிறப்புரைகளுடன்
சிறப்பு நிகழ்வாக திருமதி யசோதா கேதீஸ்வரனின் வயலின் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி.