ரொமான்டிக் ஹீரோவாக விஜய் ஆண்டனி..!!!


விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’ தனது முதல் படமாக பான்-இந்திய லவ் டிராமாவான ‘ரோமியோ’ படத்தை அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளரான விஜய் ஆண்டனி தற்போது மினிமம் கேரண்டியுள்ள கதாநாயகனாக முன்னேறியுள்ளார். இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி, பின்பு நடிகராகி பிச்சைகாரன் – 2 படத்தின் மூலம் இயக்குநரான விஜய் ஆண்டனி இப்போது தயாரிப்பிலும் கால் பதிக்கும்விதமாக தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’ நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

‘குட் டெவில்’ நிறுவனம் ஆர்வமும் திறமையும் உள்ள புது இயக்குநர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கும் களமாக இது அமைய உள்ளது.

இந்நிலையில், ’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார். இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘லவ் குரு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here