யாழ். பல்கலை மாணவி தூக்கிட்டு தற்கொலை - கிளிநொச்சியில் துயரம்..!!!



கிளிநொச்சி, கோனாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியுமான வசந்தகுமார் டீலக்சியா என்பவரே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் வீட்டில் தூக்கிட்டிருந்த நிலையில் சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, குறித்த சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Previous Post Next Post


Put your ad code here