செல்வச்சந்நிதியில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் சமரபாகு, மாவடியைச் சேர்ந்த சுந்தரம் மோகன்ராஜ் (வயது-51) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

சமரபாகு பகுதியிலிருந்து செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு காவடி எடுத்துச் சென்றவர்களுடன் நடந்து சென்ற மேற்படி குடும்பஸ்தர் ஆலயத்தில் இரவு 7.00 மணியளவில் மயங்கிபடுத்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்கின்ற போது இடையில் மீண்டும் மயங்கி விழுந்துள்ளார்.

மேற்படி நபரை முச்சக்கர வண்டியில் ஏற்றி வல்வெட்டித்துறை, ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here