வெளிநாட்டு ஆசையால் பெரும் தொகையை இழந்த யாழ்ப்பாண ஆசிரியர்..!!!


யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து 75 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய கொழும்பைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,

யாழ்ப்பாணம் -ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக விளம்பரம் ஊடாக அறிமுகமான நிறுவனம் ஒன்றின் பெயரில் 75 இலட்சம் ரூபாய் பணத்தை கட்டம் கட்டமாக வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.

எனினும் பணம் வைப்பிலிடப்பட்டு நீண்ட காலமாகியும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாமையால், யாழ்ப்பாண பொலிசாரிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையெடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், சந்தேகநபரை கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here