யாழில் 17 வயது சிறுவனும் பெண்ணும் அதிரடியாக கைது..!!!


யாழ்ப்பாணம் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

அதேவேளை, பிறிதொரு இடத்திலும் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் 44 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்ததுடன், அவரது உடைமையில் இருந்து 5 லீட்டர் கசிப்பை மீட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here