உலகம் முழுவதும் லியோ முதல் நாள் வசூல் – வெளியான உத்தியோகபூர்வ தகவல்..!!!



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் நேற்று (19) உலகம் முழுவதும் வெளியானது.

பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முதல் நாள் வசூல் விவரம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படமாக லியோ சாதனை படைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தெலுங்கில் மட்டும் முதல் நாளில் ரூ.16 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here