கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, காசா மீது இஸ்ரேலும் தொடர் வான் தாக்குதல் நடத்திவருகிறது.
தற்போது தரைவழி, கடல்வழி தாக்குதலுக்கும் தயாராகி உள்ள இஸ்ரேல், வடக்கு காஸாவில் இருந்து 11 லட்சம் மக்களையும் பாதுகாப்பு கருதி 24 மணி நேரத்திற்குள் வெளியேறும்படி கடந்த வெள்ளிக்கிழமை அறிவுறுத்தி இருந்தது. இஸ்ரேல் அளித்த கெடு நேற்றே முடிவடைந்த நிலையில், இன்று கூடுதலாக மூன்று மணி நேரம் அவகாசம் அளித்தது. இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
world news
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)