யாழில் தீயில் கருகி உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்..!!!


யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விரத்தியடைந்து தனக்குதானே தீ வைத்துக் கொண்டே பெண்ணே உயிரிழந்துள்ளார்.

எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த கர்ணிகா குமரன் வயது 29 என்ற மூன்று பிள்ளைகளின் இளம் தாய் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த பெண்ணுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் அதில் கடைசி பிள்ளைக்கு 11 மாதங்கள் ஆன நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Previous Post Next Post


Put your ad code here