முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்து கொலை ..!!!


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு அடித்துக் கொல்லப்பட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 67) கைவேலி பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் பெரிய தந்தைக்கும் குறித்த நபர் ஒருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தலையில் தாக்கப்பட்டதனால் படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பண பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் அதேபகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க இராணுவத்தில் பணியாற்றும் நபரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் க.பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை பார்வையிட்டதுடன், இது தொடர்பான முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Previous Post Next Post


Put your ad code here