யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயிலும் கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம் மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவனுக்கும் தந்தைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் நேற்று (08) காலை 6.30 மணிக்கு பெற்றோர் மகனை தேடியவேளை மகனை காணவில்லை.
பின்பு வீட்டின் பின்புறம் இருந்த மரம் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.