2024 ஏப்ரலில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்த அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அந்தவகையில் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் மின் கட்டண திருத்தம் செய்யப்படவுள்ளதால், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி மின் கட்டணம் திருத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news