லியோ திரைப்படம்; பிக்பாஸ் யாழ் ஜனனி போட்ட பதிவு..!!!


பல நாள் கனவு நினைவேறியதாக யாழ்ப்பாண ஜனனி , லியோ திரைப்படத்தில் நடித்த புகைப்படங்களை வெளியிட்டு பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். இளைய தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் நேற்றையதினம் வெளியானது.

லியோ திரைப்படத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனியும் நடித்திருந்தார்.

இந்நிலையில் லியோ திரைப்படம் தொடர்பில் ஜனனி பதிவொன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,

தளபதி விஜய் கூட நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மேலும் எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தையும் அது கொடுத்தது என பதிவிட்டுள்ளதுடன் , தளபதி விஜய் குறித்தும் பெருமையாக பதிவிட்டுள்ள ஜனனி, அதன்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here