கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்: பெண் உட்பட மூவர் அதிரடி கைது..!!!


கிளிநொச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு 10 மணியளவில் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் ஒரு பெண் உட்பட மூவரை இன்றைய தினம் (27.10.2023) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here