2023 UCMAS சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிக் கிளையை சேர்ந்த 19 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
எதிர்வரும் மார்கழி 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் உலக அரங்கில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 62 மாணவர்கள் பங்குபற்றவுள்ளதுடன் , இவர்களில் யாழ் திருநெல்வேலிக் கிளையிலிருந்து 19 மாணவர்கள் பங்குபற்றவுள்ளமை திருநெல்வேலிக்கே பெருமையாகும்.
இது தொடர்பில் திருநெல்வேலி கிளை பொறுப்பாசிரியர் தெரிவிக்கையில் ,
திருநெல்வேலிக் கிளையின் 17 வருட சாதனைப் பயணம் புத்தாக்கம் மிக்க மாணவர்களை உருவாக்குவதில் பாரிய வெற்றி கண்டிருப்பதனை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளின் மூலமாகக் கண்டு கொள்ள முடியும். ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டி வெற்றிகளில் யாழ் /திருநெல்வேலி UCMAS கிளை முன்னணி வகிக்கின்றது. மேலும் பயிற்றுவிப்பாளர்களின் மாதக்கணக்கான அர்ப்பணிப்பும், பல வருட அனுபவமுமே இந்த இளையவர்களின் திறமைகளை இந்த அரங்குக்கு கொண்டு செல்கின்றதாக அவர் குறிப்பிட்டார்.