யாழில் துயரத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்; வெளியான பகீர் காரணம்..!!!


யாழ்ப்பாணத்தில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த 25 வயதான இளம் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த இளம் தாயாருக்கு அம்மை நோய் தீவிரமாகி நிமோனியா (Pneumonia) ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ’

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குழந்தை பிறந்து ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை வருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பரவும் என கருதி பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர்.

தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை நோய் தீவிரமாகி நிமோனியா (Pneumonia) ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும் பெண்னின் உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here