யாழில். திடீரென தீ பற்றிய வாகனம் - உரிமையாளருக்கு தீக்காயம்..!!!



யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து, முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

வானில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற வானின் உரிமையாளரான தர்மபாலன் சுதாகரன் (வயது 45) என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வான் , பாடசாலை சேவையில் ஈடுபட்டு வந்தது எனவும் , நேற்றைய தினம் வியாழக்கிழமை பாடசலை சேவையில் ஈடுபட்ட பின்னர் வாகனத்தை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த போது ,வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அதனை அவதானித்த உரிமையாளர் தீயினை அணைக்க போராடிய போதிலும், வாகனம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

அதன் போது, தீயினை அணைக்க முற்பட்ட உரிமையாளரும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');