மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நாளை யாழில் திறந்து வைப்பு..!!!


மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நாளை செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமாகவுள்ளது.

இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நாளை மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் உருவாக்கப்பட்டது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here