குடும்ப வன்முறைகளை முறைப்பாடு செய்வதற்கு 'மிது பியச' பிரிவில் 24 மணி நேரமும் செயற்படக் கூடியதான தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நாட்டில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மாப்பிட்டிகம தெரிவித்தார்.
Tags:
sri lanka news