நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் 184 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் கஞ்சா மற்றும் 19,507 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
Tags:
sri lanka news
