போரின் நடுவே... ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்..!!!


இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அவர் காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், அவர் தனது கணவருடன் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்றுமுன்தினம் (28.12.2023) 2 பெண் குழந்தைகளையும் 2 ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

தெற்கு காசாவில் மருத்துவமனை வசதிகள் காணப்படாத நிலையில் அங்குள்ள ஒரு பாடசாலையில் கட்டிடத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கும் மருத்துவ மையத்திலேயே குறித்த கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here