இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்..!!!


கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

அவருக்கான காசோலையினை இன்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

அதிர்ஷ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலை இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
Previous Post Next Post


Put your ad code here