கிளிநொச்சியிலிருந்து அகதியாக தமிழகம் சென்ற குடும்பஸ்தர் ரயிலுடன் மோதி மரணம் - முகாமில் மனைவியும் மூன்று பிள்ளைகளும் தவிர்ப்பு..!!!

இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடம் அகதியாக தமிழகம் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ரயிலுடன்
மோதி உயிரிழந்துள்ளார்.

24.11.2022 அன்று கிளிநொச்சி, ஐயனார்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் கணேசமூர்த்தி (வயது 34) என்ற நபர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் மன்னாரிலிருந்து படகு மூலம் தமிழகத்தின் தனுஸ்கோடிக்குச் சென்று மண்டபம் முகாமில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கணேசமூர்த்தி என்பவர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் மண்டபம் முகாம் அருகிலுள்ள மரைக்காயர்பட்டணம் அருகில் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here