ஜனவரி முதல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை..!!!


இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க இந்தியாவுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபர்களின் உயிரியல் தகவல்களின் தரவுகள் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக டிஜிட்டல் அடையாள அட்டை விண்ணப்பிப்பதில் 76 சுயவிபர தரவுகள் கோரப்பட்டிருந்தாலும், புதிய டிஜிட்டல் அட்டை பெற 6 தரவுகள் மட்டுமே தேவை.

அதற்கமைய, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்.

முதல் முறையாக அடையாள அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதன் மூலம், அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை முறையாக வழங்குவதே நோக்கம் என கூறப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here