யாழில். பெற்றோர் கண்டித்ததால் மாணவி உயிர்மாய்ப்பு..!!!

வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த மாணவியே தவறான முடிவெடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை (05) 11 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here