கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி..!!!


இந்தியாவின் - தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற சிறுமி கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கில்மிஷாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கில்மிஷா எதிர்வரும் 28 ஆம் திகதி இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here