
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 23 வயதான நடராசா பிறையழகன் என்பவரே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம், ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news