சாதாரண தரப்பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?


கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி தற்போது பரவி வருகின்றது.

அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், அவ்வாறு எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும் இவ்வாறான பரீட்சை மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு அப்பால் துல்லியமான தரவுகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post


Put your ad code here