யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதை விற்பனை - ஆறு பேர் கைது..!!!


யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களுடன் தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பை எற்படுத்தி விற்பனை செய்து வந்தவர்களே இன்று கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இவர்களில் இருவர் மூன்று நாட்களுக்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற கட்டளை பெறப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்களின் விபரம் சந்தேக நபர்களை விசாரணை செய்து பெறப்படுகின்றது என்று பொலிஸார் கூறினர்.
Previous Post Next Post


Put your ad code here