தென்னிந்திய தொலைக்காட்சியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஈழத்து குயில் கில்மிஷா..!!!


தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

இன்றைய தினம் (17) இடம்பெற்ற இறுதி சுற்றில் கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.
சரிகமப இசை நிகழ்ச்சி

குறித்த இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.

எனினும் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தார். எனினும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.



Previous Post Next Post


Put your ad code here