யாழில் DJ nightக்கு அனுமதி மறுப்பு..!!!


யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் (DJ night) கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும் , அதில் சிலர் போதைப்பொருளை பாவித்ததாகவும் செய்திகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அது குறித்து , பொலிஸாரோ , நிகழ்வுக்கு அனுமதி வழங்கிய மாநகர சபையோ கவனம் செலுத்தவில்லை என பொலிஸ் மற்றும் மாநகர சபையினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் வருட இறுதி இரவு இசை நிகழ்வுக்கு அனுமதி கோரிய நிலையில் , மாநகர சபை அனுமதி கொடுக்க மறுத்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here