முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுவன்..!!!



முல்லைத்தீவில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயதான சிறுவன் உயிரிழந்துள்ள ஒன்று சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் செம்மலை பகுதியில் (20.01.2024) இடம்பெற்றுள்ளது.

ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கயிறு சிக்கியே சிறுவன் உயிரிழந்ததாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் 10 வயதான பிரசாந்த் தனோஷ் என்ற சிறுவனே உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கயிறு கழுத்தில் நெரிக்கப்படுவதை அவதானித்த குடும்பத்தினர் சிறுவனை உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here