500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள கேதார ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம்..!!!


ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்வதுண்டு. அவ்வாறு உருவாகும் யோகங்கள் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் கேதார ராஜயோகம் உருவாகியுள்ளது.

எப்போது 7 கிரகங்கள் 4 ராசிகளில் உள்ளதோ, அப்போது கேதார ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு திடீர் லாபமும், அதிர்ஷ்டத்தால் நல்ல வெற்றியும் கிடைக்கும். இப்போது கேதார ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கேதார ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். ஏனெனில் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன் உள்ளனர். அதோடு சூரியனும், சனி பகவானும் சிறப்பான ஸ்தானத்தில் அமைந்துள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சில புதிய வருமானத்தை உருவாக்கலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கேதார ராஜயோகமானது பல நன்மைகளை அளிக்கும். குறிப்பாக வணிகர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களின் காதல் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம். நீண்ட நாள் ஆசைகள் இந்த யோக காலத்தில் நிறைவேறும். புதிய வேலைகளைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.


துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கேதார ராஜயோகம் சிறப்பான பலன்களை வழங்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைத் துறைகளில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. சிலர் எதிர்பாராத அளவில் பண வரவைப் பெறலாம். வீட்டில் சுப காரியம் நடக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலையில்லாமல் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here