யாழில். பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு - இருவர் கைது..!!!


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள காவலரண் மீதே நேற்றைய தினம் புதன்கிழமை இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற இருவரை பொலிஸார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here