முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ..!!!


72 சுகாதார தொழிற்சங்கங்களால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here