யாழில், கிணற்றில் தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14.01.2024) பங்குரு வீதி - வட்டு தென்மேற்கு வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுப்பிரமணியம் இராசு (வயது 68) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் குளித்துக் கொண்டு இருக்கும் போது கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here