யாழில். மின்சாரம் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு..!!!



யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் வரணி - இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாவளை - இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி இளைஞன் தனது வீட்டில் மின் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here