யாழில், தொடர் காய்ச்சல்; ஆசிரியை உயிரிழப்பு..!!!



ஐந்து நாள் தொடர் காய்ச்சல் காரணமாக இளம் ஆசிரியை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

நாயன்மார்கட்டைச் சேர்ந்த திருமதி சங்கரி மதிரூபக்குருக்கள் (வயது-33) என்ற ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஈமோக்குளோபின் குறைபாட்டால் மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here