இந்த வார ராசிபலன் 05.02.2024 முதல் 11.02.2024 வரை..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல ஆதரவு கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மையை தரும். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை செலவிற்கு ஏற்ற வரவு ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரிக்கும். பிறரை நம்பி எந்த செயலையும் ஒப்படைக்காமல் தானே செய்வது வெற்றியை உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. மறைமுக எதிரிகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் எந்த செயலை செய்வதாக இருந்தாலும் எச்சரிக்கையுடனும் கவனத்துடன் செய்வது நன்மையை உண்டாக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடலாலும் மனதாலும் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைப்பது சிரமமாகவே இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு குருமார்களை வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதரவை பெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வரவு உண்டாகும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு எடுப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைய ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடேச பெருமாளை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் அடையும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் கூடுதலாக உழைத்து அதிக லாபத்தை பெற முயற்சி செய்தால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் வாங்கிய கடனை திருப்பி செலுத்து நிலைக்கு முன்னேறுவார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையைப் பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை சாமர்த்தியமாக செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த பதிவு உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொறுத்த வரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாக்குவாதங்களை தவிர்க்கக் கூடிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக எந்தவித முயற்சிகளையும், முதலீடுகளையும் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நன்மையை தரும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும். முடிந்த அளவுக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதை திறமையுடன் செய்து முடிப்பதால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. தொழிலில் நிதி பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிதாக எந்த ஒப்பந்தமும் செய்யாமல் இருப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சகிப்புத்தன்மையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும், என்றாலும் செலவுகள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. வரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி எந்த செயலையும் ஒப்படைக்காமல் தாமே செய்வது நன்மையை தரும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக பேசுவது பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வழிவகுக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் ஒவ்வொரு செயலையும் செய்து செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு செய்யக்கூடிய முயற்சிகளுக்கு உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. அதே சமயம் செலவுகள் அதிகரித்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. திறமைகள் வெளிப்படும் வாரமாக திகழப்போகிறது. அதனால் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்த பிறகு தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்த சலுகைகளையும் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. லாபத்தை அதிகரிக்க புதிய யுக்திகளை கையாள வேண்டிய சூழ்நிலையும் கூடுதல் உழைப்பும் தேவைப்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here