தமிழில் ‘யுவன்’ படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் பிரீத் சிங் (33), ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.
தொடர்ந்து ‘என்.ஜி.கே’, ‘தேவ்’, ‘அயலான்’ போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, பாலிவுட் படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார்.
விரைவில் இவரது நடிப்பில், ‘இந்தியன் 2’ படம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலர் ஜாக்கி பக்னானியை (39) திருமணம் புரிந்து மணவாழ்வில் அடியெடுத்து வைக்கவுள்ளார்.
ஜாக்கி பக்னானி தமிழில் த்ரிஷா நடித்த ‘மோகினி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர ‘வெல்கம் டூ நியூயார்க்’, ‘கூலி நம்பர் 1’, ‘பெல் பாட்டம்’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
ஜாக்கி-ரகுல் இருவரும் வருகின்ற பிப்ரவரி 21-ம் தேதி, கோவாவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கின்றனராம்.
திருமணம் 21-ம் தேதி தான் என்றாலும் பிப்ரவரி 19-ம் தேதியில் இருந்தே திருமண கொண்டாட்டங்கள் களைகட்ட ஆரம்பித்து விடுமாம்.
இவர்களின் திருமண பத்திரிகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்காக காதலர் ஜாக்கி வீடு சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் ரகுல் பிரீத் சிங்-ஜாக்கி பக்னானி திருமணத்திற்கு, தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
Tags:
cinema news
