வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் தொழில், படிப்பு போன்றவற்றில் கெட்டிக்காரராக இருப்பார்.
இப்படிப்பட்ட புதன் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் சனி பகவானின் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதி புதன் சனி பகவானின் மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
கும்ப ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த பெயர்ச்சிக்கு பின் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். பேச்சால் பல பிரச்சனைகள் தீரும் மற்றும் புதிய உறவுகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். தொழிலில் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகளும் நல்ல பலனைத் தரும். நிதி நிலை வலுவாக இருக்கும். மார்கெட்டிங், ஊடகம், பேச்சு தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் நல்ல வருமானத்தை இக்காலத்தில் பெறுவார்கள்.
000000
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் உங்களின் மரியாதையும், கௌரவமும் உயரும். வேலையை மாற்ற எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். முதலீடுகளால் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் செய்யும் முதலீடுகளால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள்.
Tags:
Rasi Palan
