யாழில் 23 இலட்ச ரூபாய் நகை உள்ளிட்டவற்றை களவாடிய குற்றத்தில் இளைஞன் கைது..!!!


யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் இல்லாத நேரம் புகுந்து சுமார் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் ஆகியவற்றை களவாடிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , களவாடப்பட்ட 13 பவுண் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தினையும் மீட்டுள்ளனர்.

யாழ்.நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆட்கள் இல்லாத சமயம் உட்புகுந்த திருடர்கள் நகைகள் மற்றும் பணத்தினை களவாடி சென்று இருந்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தது விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  வெள்ளிக்கிழமை கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் களவாடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here