வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் 30 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் பிப்ரவரி 13 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் சூரியன் நுழைந்தார்.
இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது.
சனி, சூரியனும் எதிரிகளாக கருதப்படுவதால், இந்த சனி சூரிய சேர்க்கை சிறப்பானதாக இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நிகழ்ந்துள்ள சனி சூரிய சேர்க்கையால் நிறைய லாபத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு தேடி வரும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். வணிகர்கள் அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ரகசிய ஆதாரங்களில் இருந்து நிதி நன்மைகளைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் நிறைய செல்வத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள்.
Tags:
Rasi Palan
