இன்னும் ஓரிரு நாட்களில் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதத்தில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகளால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக பண விஷயத்தைப் பொறுத்தவரை, சில மாதங்கள் சிறப்பாகவும், இன்னும் சில மாதங்கள் கொடுமையாகவும் இருக்கும்.
அந்த வகையில் 2024 மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. இதனால் சில ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் புரளப் போகிறது. அதுவும் சிலருக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். இன்னும் சிலருக்கு வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். இப்போது 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையால் நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு இரட்டிப்பு அதிகரிக்கும். இதுவரை பரம்பரை சொத்துக்களால் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த மாதத்தில் அப்பிரச்சனைகள் நீங்கி, அதன் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை முறை மேம்படும். இதன் காரணமாக செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இருப்பினும் இந்த மாதத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். எப்பேற்பட்ட பண பிரச்சனையில் இருந்தும் எளிதில் விடுபடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இம்மாதத்தில் நிறைவேறும். சிலர் புதிய வாகனத்தை வாங்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது அட்டகாசமாக இருக்கும். இந்த மாதத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறலாம். உங்கள் வாழ்வில் இருந்த தடைகள் நீங்கும். சிலர் புதிய தொழிலைத் தொடங்கி கொடிகட்டிப் பறக்கலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் சரியாக முதலீடுகளை செய்தால், எதிர்பார்க்காத அளவில் லாபத்தைப் பெறலாம். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இந்த மாதத்தில் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் அல்லது உங்கள் வாழ்வில் ஒரு இலக்கை நிர்ணயித்து இம்மாதத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் நிதி நிலை மார்ச் மாதத்தில் இருமடங்கு அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஆர்டரைப் பெறுவார்கள். அந்த ஆர்டர் எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தரும். பணம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையும் இம்மாதத்தில் இருக்காது. மொத்தத்தில், இந்த மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும்.