‘தளபதி 69’ : ரேஸில் இருந்து விலகிய ஹெச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ்?


விஜயின் 69-வது படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ் இருவரும் ரேஸில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ‘மகான்’ படத்தின் 2-வது பாகம் உருவாகுவதாக கார்த்திக் சுப்புராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். துருவ் விக்ரம், விக்ரம் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறாராம்.

தன்னுடைய 62-வது படத்திற்கு பின்னர் ‘மகான் 2’ படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இதனால் அப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் கார்த்திக் சுப்புராஜ் ஈடுபட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ், விக்ரமுடன் இணைவதால் விஜயை இயக்கும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லையென்றே ஆகி விட்டது. இதேபோல ஹெச்.வினோத்தும் அடுத்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷின் 52-வது படமாக உருவாகும் அப்படத்திற்கு ஹெச்.வினோத் தற்போது திரைக்கதை எழுதி வருகிறார். இதனால் அவரும் விஜயை இயக்குவது கேள்விக்குறி தான்.

இதேபோல வெற்றிமாறன், ஷங்கர், அட்லி என்று ‘தளபதி 69’ படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அனைவருமே, தங்களது அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டனர்.

இதனால் உண்மையில் விஜயின் 69-வது பட இயக்குநர் யாரென்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தயாரிப்பு தரப்பு விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here