வெளிநாட்டில் இருந்து வந்தவரின் வீட்டில் பெறுமதியான பொருட்களை திருடியவர் அச்சுவேலியில் கைது..!!!


யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீட்டில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைவாக செயற்பட்ட பொலிஸாரினால் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

அதே பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.
Previous Post Next Post


Put your ad code here